சோசியல் மீடியாக்களில் தங்களுடைய ஏதாவது ஒரு திறமையை காட்டி முன்னேறனும் பலரும் நினைப்பாங்க அதன் மூலம் நிறைய பேரு ஒரு லைஃப் சேஞ்சும் ஆயிருக்கு youtube வலைத்தளம் மூலம் உணவுகளுக்கு ரிவ்யூ கொடுத்து பிரபலமானவர்தான் youtuber இர்ஃபான்

இர்பான் அவர்கள் தன்னுடைய youtube சேனல் மூலமாக உணவுகள் ஹோட்டல்கள் ரிவ்யூ கொடுத்து அதன் மூலம் பேமஸ் அடைந்தார் அது தொடர்ந்து இப்போ சினிமா பிரபலங்களை இன்டர்வியூ எடுக்கிறது அவங்களோட படங்களுக்கு ப்ரமோஷன் கொடுக்கிறதுன்னு அந்த வேலையிலும் பிஸியா தான் இருக்காரு இது இடையில சமீபத்தில் ஆரம்பமான விஜய் டிவியோட குக் வித் கோமாளி ல குக்காவும் களம் இறங்கி இருக்காரு



இர்பான் அவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் ஆனது சமீபத்துல தாங்க கர்ப்பமா இருக்குறதாகவும் கூடிய சீக்கிரத்துல எங்களோட குழந்தை வரப்போகுது அப்படிங்கற ஒரு குட் நியூஸ்சையும் தங்களுடைய ரசிகர்கள் கூட இர்பானும் அவரோட மனைவியும் ஷேர் பண்ணி இருந்தாங்க ஏற்கனவே ரசிகர்கள் இந்த விஷயத்தை கண்டுபிடித்து தொடர்ந்து கமெண்ட்ஸ்ல கேட்டுட்டு இருந்த காரணத்தினால்தான் சமீபத்தில் இதை பத்தி அவங்க ஷேர் பண்ணினாங்க அதுவும் ஏழு மாதங்கள் ஆகுது அப்படிங்கிற விஷயத்தை சொல்லி இருந்தாங்க



இதுக்கிடையில இர்பான் அவர்கள் தன்னோட குழந்தை ஆணா பெண்ணா அப்படிங்கறத ஜென்டர் பார்த்ததுக்குரிய போட்டோவையும் ரிலீஸ் பண்ணி இருந்தாரு

இத பாத்து ஒரு சிலர் இர்ஃப்பானை பாராட்டி இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அவரை திட்டி தீர்த்தாங்க காரணம் இந்தியால ஜெண்டர் பாக்குறது தடை செய்யபட்டு இருக்கு

பெரும்பாலான ரசிகர்கள் இந்தியால தான் அது தடை செய்யப்பட்டு இருக்கு இவர் இந்தியால பார்க்கல வேற ஏதோ நாட்டுல போய் பார்த்து இருக்காரு அப்ப அது தப்பு இல்ல தானே அப்படின்னு சப்போட் பண்ணிட்டு இருக்காங்க இந்த ஒரு விஷயம் சோசியல் மீடியால தீயா பரவிட்டு இருக்கு

ஏற்கனவே இர்பான்னுடைய காரில் அடிபட்டு பெண் ஒருத்தவங்க இறந்த விஷயம் ரொம்ப பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்துச்சு

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.