ஜிவி பிரகாஷ் மற்றும் சாய்ந்தவி பிரிந்து வாழ்வதாக வந்த செய்திகளை கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்கள் கூட அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நிலையில் இப்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜிவி பிரகாஷ் மற்றும் சாய்ந்தவி அவர்களது உத்தியோக பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் அந்தப் பதிவில் கூறுகையில் ஜிவி பிரகாசும் சாய்ந்தவியும் மிக நீண்ட யோசனைக்கு பிறகு இந்த முடிவு செய்துள்ளோம் ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையை பேணுவதன் மூலம் மன அமைதி முன்னேற்றத்திற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
தயவுசெய்து ஊடகங்கள் , நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்கள் தனி உரிமை புரிந்து கொண்டு எங்களது இந்த கடினமான நேரத்தில் ஆதரவு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு அவர்களை உத்தியோக பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பிரிவதை உறுதி செய்த நிலையில் அவர்களது ரசிகர்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
11 வருட திருமண வாழ்க்கை அதன் முன்னிருந்த இவர்களது கல்லூரி கால காதல் மற்றும் பல விடயங்களை சமூக வலைத்தளங்களில் இவர்களது ரசிகர்கள் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது.
இவர்கள் பிரிவதற்கான காரணமாக கூறப்படுவது சமீப காலத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பதையும் தாண்டி பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றார் ஆனால் அந்த படங்களை பொறுத்தவரை அதிகமான நெருக்கமான காட்சிகளைக் கொண்ட படங்களாகவே இருக்கின்றது. இதனால் மனைவி சாய்ந்தவி இவ்வாறான நெருக்கமான காட்சிகளை தவிர்க்குமாறு ஜீவிய இடம் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜி வி பிரகாசுக்கு கிடைக்கும் அதிகமான படங்கள் அவ்வாறான கதை அம்சத்தை கொண்டிருப்பதனால் அவரால் அப்ப படங்களை உதாசீனப்படுத்த முடியவில்லை. இதுவே அவர்களின் பிரிவிற்கு முக்கிய காரணம் என சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜிவி பிரகாஷ் உடைய இசை மற்றும் சாய்ந்தவினுடைய பின்னணி பின்னணிப் பாடலுக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.