பிரபல திரைக்கதை எழுத்தாளனும் மலையாளத்தில் பிரபல இயக்குனருமான சங்கீத் சிவன் திடீர் மாரடைப்பால் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இவர் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தி மலையாளம் போன்ற திரைப்படத்துறைகளிலும் தனது அளப்பரிய பங்கை ஆற்றியுள்ளார்.

சோர் என்ற படத்தின் மூலம் 1998 இல் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார் இவர் ஹிந்தியில் இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இவர் வசித்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலை நிர்வாகம் எவ்வளவு முயற்சி செய்தும் நேற்று இரவு எட்டு மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார், இதனை அவரது சகோதரர் சந்தோஷ் உறுதிப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.