Author: Uma
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் நள தமயந்தி .இந்த சீரியலில் ஹீரோயினியாக நல்கரி பிரியங்கா அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதற்கு முன் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். திருமணமான நிலையில் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகினார். அதன்பின் நள தமயந்தி சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியதாக வதந்திகள் பரவியது நல்ல தமயந்தி சீரியலில் பிரியங்காவின் தங்கையாக ஸ்ரீநிதி அவர்கள் புதிதாக நடிக்கிறார் .எனவே பிரியங்கா அவர்கள் சீரியலில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவின . இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் நான் சீரியலில் இருந்து விலகவில்லை என்னுடைய schedule்க்காக காத்திருக்கிறேன் என்ன நடந்தது என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று அதில் பதிவிட்டிருக்கிறார்.
டைரக்டர் சுந்தர் சி அவர்கள் பல படங்களை இயக்கி மற்றும் தயாரித்தும் இருக்கிறார் .சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் முறைமாமன். அதைத் தொடர்ந்து உன்னை தேடி ,உள்ளத்தை அள்ளித்தா,மேட்டுக்குடி ,கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற பல படங்கள் பண்ணியிருக்கிறார் .சுந்தர் சி அவர்கள் ரஜினி, கமல் மற்றும் அஜித் அவர்களை வைத்து அருணாச்சலம் அன்பே சிவம் மற்றும் உன்னைத் தேடி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் . ஆனால் நடிகர் விஜய் அவர்களை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை .இதற்கு காரணம் என்ன என்பதை ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார். விஜய் அவர்களே வைத்து தான் உன்னை தேடி என்ற படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் அந்த டைமில் விஜய் அவர்களிடம் கால் ஷீட் இல்லாத காரணத்தினால் அவர் அதில் நடிக்கவில்லை. சமீபத்தில் விஜய் அவர்களுக்கு ஒரு கதை சொன்னேன் .ஆனால் அதில் இரண்டாம்…
நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் ஏப்ரல் 26 1970 இல் ஆலப்புழா வில் பிறந்திருக்கிறார்.இவரது சொந்த ஊர் கேரளா .இவரது ஐம்பத்தி நாலாவது பிறந்த நாளை இவர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். சரண்யா அவர்கள் இயக்குனர் பொன்வண்ணன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் .தற்போது இந்த தம்பதியர்களுக்கு சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இவர்களது இரண்டு மகள்களும் டாக்டருக்கு படித்திருக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணன் அவர்கள் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒரு சில கன்னட மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர்களின் சிறப்பாக நடிக்கும் நடிகைகளின் இவரும் ஒருவர். இவர் நேஷனல் அவார்ட்ஸ் ,ஃபிலிம் ஃபார் அவார்ட்ஸ் ,விஜய் அவார்ட்ஸ் போன்ற நிறைய அவார்ட்ஸ் வாங்கி இருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் அவர்கள் நடிப்பை தவிர பேஷன் டிசைனிங் பண்ணி வருகிறார் .சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கு தற்போது 54 வயது ஆகிறது.இவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி…
நல்கரிபிரியங்கா ரோஜா சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார். அவர் இதற்கு முன்பாக நிறைய படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் ரொம்பவும் பிசியாக நடித்து வருகிறார். பிரியங்கா அவர்கள் ராகுல் என்ற பிசினஸ்மேனை திருமணம் செய்து கொண்டார் .இவர்களது திருமணம் ரகசியமாக நடந்தது. இவர்களது திருமணம் நடைபெறும் போது பிரியங்கா அவர்கள் சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வந்தார் .திருமணம் ஆன சிறிது நாளில் அந்த சீரியலில் இருந்து விலகினார் .இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்று பலவாறு வதந்திகள் பரவின.அதைத்தொடர்ந்து இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று கூறினார்கள். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்காவின் பிறந்த நாளை அவரது கணவருடன் இணைந்து கொண்டாடினார் .அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.